இயலாமை என் அம்மா
விதியொன்றை யார் செய்தான்
வினை தீரா உலகமிது
மதி தன்னை மறந்துவிட்டேன்
சதி செய்த வஞ்சனையால்
கருவறையை மறந்திருந்தேன்
கடுகளவும் நினைப்பில்லை
பினி நெருங்கும் நேரங்களில்
பணி ஒன்றே நன் செய்தேன்
காலங்களை நீ உணர்ந்தே
என்னுறவை இணைக்க வந்தாய்
கண் பட்டதானென்று -எம்
வினையை நீ மறைத்தாய்
முற்போக்கு சிந்தனையில்
முதிர்ச்சியுற்று நீ இருந்தும் -எம்
மனது ஏற்கவில்லை
மாதவத்தை நினைக்கவில்லை
காலம் உன்னை கூட்டி செல்லும்
நாட்களிலே நான் உணர்ந்தேன் -என்
நெஞ்சம் பதைக்கிறது
விதியென்று நீ சென்றாய்
காலடியாய் பார்க்கின்றேன்
பாவி மகன் பின் தொடர்வேன்
இயலாமை பூண்டுவிட்டேன்
என் செய்வேன் என் அம்மா!!!