லட்சியத்தை நோக்கி

எனக்கு பயமாக இல்லை முதல்படியை ஏறிய போது.
சாதாரணமாக இரண்டாம், மூன்றாம் படிகளை கடந்தேன் எல்லாம் எளிதாக உள்ளதே என்று.

நான்காம் படியில் இருந்த போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் இன்னும் சில படிகளில் என் லட்சியத்தை அடைத்துவிடப் போகிறேன் என்று.

ஆனால்,
என் ஆறாம் அறிவு சொன்னது, " நீ நினைப்பது அவ்வளவு சுலபம் அல்ல! "என்று.
வீழ்ச்சிகளைச் சந்திக்காமல் அசுர வளர்ச்சி அடைவது சாத்தியமல்ல மாடிப்படிகளை ஏறுவதைப் போல.

மாடிப்படிகளில் ஏறும் போது கூட கவனமாக இருக்க வேண்டும்.
இல்லையெனில் அடிதவறி கால் இடறி கீழே விழ நேரிடும்,
அல்லது கீழ் நோக்கி உருள நேரிடும்.
ஆதலால் நீ ஒவ்வொரு படியில் ஏறும் போதும் கவனமாக இருத்தல் வேண்டும் என்றது என் ஆறாம் அறிவு.

லட்சியத்தை அடைவதில் தாமதமானாலும் பரவாயில்லை.
ஆனால், தோல்வி அடைவதால் ஏற்படும் விரக்தியில் லட்சியத்தைக் கைவிடமாட்டேன் என்ற தீர்மானத்தோடு அடுத்தபடி முன்னேறினேன்.
அதற்குமேல் நகரவிடாது தடுத்து நிற்கின்றன தடைகள் மலையாய்.
தடைகளைத் தகர்த்தெறிய சில காலங்கள் ஆகலாம்.
ஆனால் எள்ளளவும் லட்சியத்திலிருந்து பின்வாங்கமாட்டேன்.
தடைகளை உடைத்தெறியும் வழிகளைத் தேடுகிறேன் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Dec-18, 5:31 pm)
பார்வை : 4605

மேலே