அடங்காத பிள்ளை
தாலாட்டும் கடல், தயங்காத வானம்
இவ்விரண்டுக்கும்
கட்டுக்கடங்கா குழந்தை ஓன்று மழையாக .
மழையென்றால் மழலை
அது ஏற நினைத்தால் ஏறிநிற்கும்
இறங்க நினைத்தால் தடுப்பார் யாருமில்லை
அடங்காப் பிள்ளை குடும்பத்துக்கு ஈனம்
அதை எண்ணி எண்ணி ஏங்கும்
அன்னையும் தந்தையும்,
அதுவே கடலும், ஆகாயமும்
இவை இரண்டும் சந்திக்கும் வேளையில்
மேகத்தின் உதரத்தில்
மழை எனும் மழலை உருவாகிறது
அடங்காத பிள்ளை ஓன்று தன் உதரத்தில் உள்ளதென்று
ஆகாயம் ஒருபோதும் நினைப்பதில்லை ,
ஆனால் பெற்றெடுக்கும் போது
அதன் வலி ஆகாயம் மட்டும் அறியும்,
அதுமட்டுமல்ல பூமியில் உள்ள மக்கள்
மழையே வா என வேண்டும் போது
செருக்குடன் சிக்கென நீல வானத்தில் ஒழிந்து
மக்களை ஏளனத்துடன் பார்த்து நகைக்கும் இம்மழலை .
ஆனால் இம் மழலை தேன் சிந்தும் இதழால்
புன்னகை ஓன்று சிந்தினால் போதும்
உலகுக்கு மழை வந்து விடும்
உலகம் முழுமையும் செழிக்கும்
மழையெனும் மழலையே
நீ சிரித்துவிடு மனிதன் மகிழ்ந்திட