சீதனம்

#சீதனம்
கோடி கோடியென பொருள்
கொட்டிக்கிடக்கின்ற - கடல்
அள்ளக் குறையாத
அபூர்வ அட்சயந்தான்..!
விதை போடாமல் அறுவடை
நீரான வயல்வெளி
பெரும் ஆழி உலகிற்கு - ஆண்டவன்
அளித்திட்ட சீதனம்தான்..!
கொடையென மழைதரும்
உணவினை வளர்த்திடும்
அகண்ட வானம்
உயிருக்கு சீதனம்தான்..!
பொன்பொருள் பணமென
திருமண சந்தையில்
பெண் விலை பேசிடும்
பேயுரு சீதனம்தான்
பேயோட்டிட நன்மைகள்தான்..!
##சொ.சாந்தி-