விவசாய கம்பெனி அன்டு கோ

ஏர் பூட்ட எருது வளத்து
தார்குச்சி ஒட்ட தழை போட்டு
ஆடி வெளச்சல் அமோக வெளெச்சலாக
மாசம் மும்மாரி பொய்யயிலே
காசுக்கு மதிப்பில்ல
கண்டவனும் தலைவனில்ல எனக்கு.

காலம் மாரிடிச்சின்னு
எருவுக்கு மாற்றா ஒரம் போட்டானுவ
தண்ணிக்கு பதிலா மருந்தடிச்சினுங்க
திங்கிற சோத்த கூட மாத்திட்டானுங்க
விஷமா ஆக்கிட்டானுங்க.

கார்ப்பரேட் நிறுவனம்
கையெடுக்காத துறை
கவர்மென்டு கூட காப்பாற்றா துறை
களவாணி தனம் இல்லாத துறை
காலமெல்லாம் கஞ்சியூற்றும் துறை.
விவசாயத்துறையை விட
வேறென்ன இருக்க முடியும்!!!!

கல்கி
மணியன் கலியமூர்த்தி

எழுதியவர் : மணியன் கலியமூர்த்தி (25-Dec-18, 1:47 am)
சேர்த்தது : Moorthy kmk
பார்வை : 61

மேலே