குழந்தை காட்டிய காதலி

பழைய நினைவை மீட்டுக்கொண்டு உறங்கியதால் காலையில் தாமதமாக எழநேரிட்டது வழமைக்கு மாறாக பேருந்து கூட நேரத்துக்கு மாறாக வந்து போய்விட்டது தனியார் வாகனமொன்றில் அலுவலகம் சென்றேன் அங்கு அதிகாரி வாகனம் நிறுத்த பட்டு இருந்தது.

இது என்னடா இண்டைக்கு நேரத்தோடு இந்த மனிசன் வந்திருக்கான் என்று எண்ணிய படி உள்நுழைகிறேன் வார்த்தைகளை உதறித்தள்ளுகின்றார் குனிந்த படி நின்றேன் போய் இரு என்றவுடன் இருக்கையில் அமர்ந்தேன்
முக நூல் பக்கத்தை திறந்தால் தினகரன் மாமாவின் புதினங்களை பார்த்து விட்டு திரும்புகின்றேன் எருமை மாடாட்டம் அதிகாரி தலையை அசைத்தபடி செல்கின்றார் .என்ன சகுனம் டா எதை செய்தாலும் தவறாகவே இருக்கிறதே யென்று முணுமுணுத்துக் கொண்டே வேலையைத்தொடங்கினேன் அன்று என்னவோ தெரியல எதை செய்தாலும் தவறாகவே இருந்தது அன்றைய காலை இனிமையாக இரா விட்டால் சூனியத்தால பாதிக்கப்பட்டவர்கள் போல தான் இருக்கும்

லீசிங் போட்டாவது ஒரு வைக் வாங்க வேண்டும் என புலம்பியே பேரூந்தை பார்த்து நிற்கின்றேன் அடிச்சி புடிச்சி ஏறினேன் பின்னால போங்க என்று நடத்துனர் கத்திக்கொண்டு இருக்கின்றான் அந்த நேரம்
குழந்தையின் அழுகையை தாய் எவ்வளவோ முயற்சி செய்தும் அழுகையை நிறுத்துவது போல இல்லை எனது கையடக்க தொலை பேசியும் அழுகிறது யாரென பார்க்கையில் குழந்தை கைபேசியை கண்டு அழுகையை நிறுத்தி விட்டது பைக்கேற்றில் வைக்க மீண்டும் அழுகின்றது
அழுகையை நிறுத்த குழந்தையிடம் கைபேசி கைமாறுகின்றது ஆனந்தத்தில் மூழ்கின்றது குழந்தை

சிந்தனை திசை மாறுகின்றது தரிப்பிடம் வந்ததும் இறங்கிய பின் கைபேசியைத்தேடுகின்றேன். ஒகோ குழந்தையிடம் கொடுத்ததை திரும்பப் பெற வில்லையே சங்கடத்துடன் வீட்டுத்தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினேன் பேசியது எனது கைபேசி மழலை கலந்த மங்கைக்குரலொன்று.

அக்கா இது என்னுடைய போண் தான் உங்க குழந்தை அழுகையை நிறுத்த கொடுத்தேன் மறந்து இறங்கி விட்டேன் ..
அய்யோ என் குரல் உங்களுக்கு அக்கா குரல் போலவா தெரிகிறது நான் குழைந்தையின் சித்தி ..ஒ..ஒ... சாரிங்க
நான் சொல்லும் இடத்துக்கு வந்து எடுத்து போங்கள் என்றாள்
சரி நான் நாளை வாறேன் என்றேன் !
அவர்களின் முகவரியைச்சொன்னாள்
எனது வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது
அதே குரல் அழைத்தது ஆனால் வேறு இலக்கம் பெயரை தெரிந்து கொள்வதற்காக
ஹலோ யார் நீங்க ?
நான் உங்க தொலை பேசி வைத்திருக்கும் ஆள் என்றாள்
உங்கள் பெயர் ? அது தேவையில்லை
இன்று வருவதாக சொன்னீங்க வரவில்லையே என்று தான் கால் பண்ணினேன் .
வேலை அதிகமானதால் வர முடிய வில்லை நாளைக்கு நிச்சயமாக வருவேன் என்றேன்
நான் குறுந்தகவல் போட்டு இருந்தேன் நாளை வருவேனென்று நீங்கள் பார்க்க வில்லையா ?
நீங்க உங்க போணுக்கு லாக் போட்டு இருக்கீங்க எப்படி பார்ப்பது என்றாள்
ஒ...ஒ... மறந்திட்டேன் ..என் இதயத்துக்குள் செல்ல இந்த கடவுச்சொல்லை அழுத்தி உள்நுழையுங்கள் என்றேன்
உங்களுக்கு அதிகம் சிரமம் போல என்று வினாவினேன் உடனே !ஆமாம் உங்கள் போண் அதிகம் அழுகின்றது நீங்கள் இல்லமால் சிரமமாகத்தான் உள்ளது என்றாள்
அப்படியா? என்று என் தொடர்பை துண்டித்து விட்டேன் .

நாளை கண்டிப்பாக போக வேண்டும் எனது கைபேசியை எடுப்பதை விட அந்த அழகிய குரலுக்கு சொந்தமானவளை காண ஆவல் அதிகமாகிறது
மறு நாள் காலை
அவர்களுடைய வீட்டுக்கு சென்று இருந்தேன் உப சரிப்பு அன்பாயிருந்தது
அழகிய குரலுக்கு சொந்தமானவளைக்கண்டவுடன் அடையாளம் கண்டு விட்டேன்
பிடியுங்கள் உங்கள் இதயத்தை என்றாள்
மெல்ல சிரிப்போடு பெற்றுக்கொண்டேன்.
இதயமோ இடமாறி விட்டது அந்த அழகு வதனத்திலும் அன்பு உபசரிப்பிலும்
நான் சொன்ன வார்த்தையை சில மாற்றங்களுடன் தகவல் அனுப்பியிருந்தாள் உங்கள் இதயத்துக்குள் நுழையச்சொன்னீங்க நுழைந்தேன் ஆனால் என்னால் திரும்ப வரமுடிய வில்லை எப்படி வருவது என சிணுங்கல் சிரிப்போடு வந்திருந்தது உள்பெட்டிக்குள் ஒரு சேதி


கைபேசிக்காரி காதலியானாள் காதலுக்கு வழியமைத்த கைக்குழந்தை கடவுளானது ..
அன்று போல் என்னால் அலைபேசியை தவறி விட்டு இருக்க முடியவில்லை அந்த குரலோடு கலந்து விட்டுகிடந்தது எனது வாழ்க்கை.
நான் ஒரு வைக் வாங்கிய முதல் நாள் அவளை முதல் முதல் ஏற்ற வேண்டும் என மனம் உத்தரவு இட்டது அதற்காக அவளை சந்தித்தேன் அவர்கள் ஊரின் கோயிலில் வைக்குக்கு பட்டுக்கட்டிய பின் இருவரும் ஒரு இனிமைப் பயணம் சென்றோம் கடற்கரையில் கைகோர்த்து நடக்கும் காதலர்களானோம் அலையை அவள் கால் தொடும்போது அவள் என் கரத்தினை இறுக பிடித்திருந்தாள் அந்த நேரம் என் மனதுக்குள் ஒரு சத்தம் இது போன்று என்னை கைவிடாது பிடித்துகொள்வாயா? என கேட்டது சமுத்திரத்தை சாட்சியாக்கி சத்தியம் செய்தேன் மனதுக்குள் உன்னை பார்த்துக்கொள்வேன் என்று அதன் பிறகு வராத பிரச்சனைகள் இல்லை எல்லாமே தோர்த்துப்போனது உண்மையான காதலிலிருந்து./
காதலியை காட்டிய குழந்தை தான் எங்களுடைய குழந்தைக்கு விளையாட்டுக்காட்டுகின்றது/

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (25-Dec-18, 10:50 am)
பார்வை : 309
மேலே