நழுவிடும் இதழாய்

நழுவிடும் இதழாய் -நீ ./
அதைக் கழுவிடும்
உமிழ்நீராய் -நான்./
கொவ்வை இதழ் அழகி -நீ./
அதில் மெதுவாக தடவிக்
கொடுக்கும் சாயம் -நான்./


குயிலாக அழகு
இதழால் இசைப்பது -நீ./
அதில் செந்தமிழ்
சொல்லாகப் பறப்பது -நான் /


அழகு இதழால்
அசிங்கமாகத் திட்டித் தீர்ப்பது -நீ ./
அதையும் கேட்ட படியே
பார்த்து ரசிப்பது -நான்./


இப்படியெல்லாம்
கூறி விடவே ஆசையடி ./
நீ யாரோ ?நான் யாரோ ?
உன் புன்னகைப் புகைப் படம்
இங்கே மாட்டியவர் யாரோ .?


நழுவிடும் உன்
மாங்கனி இதழ் கண்டு /
புலம்புகிறது என்
பருவ மனம் நின்று./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (27-Dec-18, 12:36 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 93

மேலே