என் வாழ்வின் விடிவெள்ளி நீயல்லவா

பழமையான தமிழ் எடுத்து
இனிமையான சொல் அமைத்து.
ஒரு காதல் மடல் வரைய ஆசை..

அதில் உன் பெயரை இடை
இடையினிலே போட்டு கவிதை
போல் வரையவே ஆசை.....\

அடுக்கு மொழி போட்டு தொடுக்கும்
கவிக்கடிதம் என் இதயத் துடிப்பை
உரைக்கும் வண்ணம் எழுத ஆசை.....\

எழுது கோல் எடுத்து நாற்காலியில்
அமர்ந்த பின்னே விடி வெள்ளியாக
வந்து அமர்கின்றது உன் மீதான ஆசை ....../////

பறந்து வந்து விடுகிறது காமத்துக் கவிதை
திறந்து விடுகிறது இதயச் சிறை அதை
விதி வழி வந்த விடி வெள்ளியா நீ அதை
ஆராய்ந்து கூறவே என் நெஞ்சில் ஆசை ...../////

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் பூத்த
விடி வெள்ளி நீயடி உன் விழியோ மின் விளக்குடி
இத்தனையும் கூறி முடித்த. மடலை
உன் கரம் சேர்க்கவே இப்போது ஆசை ......../////

இ. சாந்தா

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (27-Dec-18, 12:46 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 147

மேலே