சுப்ரமணிய பாரதி

சமூகம் கிடந்தது
சாதி எனும் குப்பையா
அதைச் சுத்தமாக்க நினைத்தது
சுப்பையா

பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த
பெண்களைத் தன் பா திறத்தால்
சரித்திரம் படைக்க வைத்தவன்

பொருள் வைத்தால்
பாடுவோர் மத்தியில்
இவன் பொருள் வைத்துப்
பாடுபவன்

வெள்ளையனுக்கு
மையில் உலைவைத்தான்
செல்லம்மாவோ
வறுமையில் உலைவைத்தாள்

இவன் பேராசை கொண்டவன்
பெண்ணடிமை ஒழியவேண்டும்
என்ற பேராசை கொண்டவன்

இவன் வருகையால்
புதுவையில் புது வெய்யில்
பிறந்தது

இவன் பூ நூலை
விடுத்துப் பா நூலை
அணிந்தவன்

கபிலன் நாவுக்குள்
வைத்ததை
கமலம் பூவுக்குள்
வைத்ததை
தன பாவுக்குள்
வைத்தவன் இவன்

சரஸ்வதி கழுத்தில்
அணிந்த நகையை
தன் எழுத்தில் அணிந்தான்
எதுகையாய்

பாரதியைப் போற்றுவோம்

எழுதியவர் : குமார் (28-Dec-18, 3:41 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 142

மேலே