தேரையரின் பாறை,சுக்கான் பாறை, கருங்கல் பாறை ஜலத்தின் குணங்கள் 7

தேரையரின் பாறை,சுக்கான் பாறை, கருங்கல் பாறை ஜலத்தின் குணங்கள். (7)

பாறை ஜலத்தின் குணங்கள்.
--------------------------------------------
வெண்பா

பாறைமீ தூறுகின்ற பானியந்தன் னையுண்டால்
ஏறு முடல்மெல்ல மீறிப்போம் - வீறுகின்ற
வாதகோ பத்துடனே மாறாச் சுரமுமெழும்
ஓதஜலத் துண்ட உவர்ப்பு. (37)

போசனாந்தத்தில் உப்பைத்தருகின்ற பாறை ஜலத்தினால் தேகம் சில்லிடலும், வாதததோஷமும் தந்தசுரமும் உண்டாகும்

சுக்கான் பாறை ஜலத்தின் குணங்கள்
-------------------------------------------------------
விருத்தம்

நீர்கடுப் பொடுநெஞ் சினிற்சீழ் கட்டும்
பார்க்கிற் பித்தம் பலபிணி சூழ்வதாக
தீர்க வாயுவைத் தீர்த்திடு சிந்தைநோய்
தார்கி டுஞ்சுக்கான் தனிப்பாறை நோயுமே (38)


சுக்ககான் பாறை நீரானதுமூத்திரக் கடுப்பு நெஞ்சில் கபக்கட்டு பித்தாதிக்க கபத்தைப்பற்றிய சிற்சில ரோகங்கள் மனோவியாதி ஆகியவைகளை உண்டாக்குமென்க .

கரும்பாறை ஜலத்தின் குணம்
----------------------------------------------
வெண்பா

கரும்பாறைத் தண்ணீர் கனசோபை வாந்தி
பெரும்பாடு பித்தசுரம் பீடை - யருந்தயக்க
நீர்கடுப்பு தாகமிவை நீங்கிவித்தை புத்தியழ
கேற்கவகைப் பிக்குமெய்யை யென் (39)

கரும்பாறை ஜலமானது வீக்கசாந்தி, அசிர்க்காரோகம், பித்தசுரம், மயக்கம், மூத்திரக்கடுப்பு, தாகம் ஆகிய இவைகள் விலகும். வீரியம், புத்தி, அழகு ஆகிய இவற்றை உண்டாக்கும் என்க.

எழுதியவர் : பழனி ராஜன் (30-Dec-18, 9:08 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 138

மேலே