புத்தாண்டே வருக

வெண்பனி போர்வை திறந்து
எதிர்பார்ப்புகள் அள்ளி எடுத்து
முயற்சிக்கு மறுவாய்ப்பு கொடுத்து
கடலளவு ஆசை வளர்த்து
மனதார மனிதம் போற்றும்
உறவோடு நட்பும் பெறுக
நீர் வற்றா நிலங்களும்
பஞ்சமில்லா பிள்ளை மனங்களும்
அன்பு நிறைந்த நெஞ்சங்களும்
இயற்கையை போற்றும் எண்ணங்களும்
செழிப்பில் திளைக்கும் உழவனும்
நிஜத்தில் உறவாடும் நட்புகளும்
நிம்மதியான இரவு உறக்கமும்
திடமான தேக பலமும்
தெளிவான மனச் சிந்தையும்
மனதார அளிக்கும் கொடையும்
வரமாக புதுவருடம் வழங்க
அனைவர்க்கும் வாழ்த்து கூறி
வருக வளங்கள் பெருக்கவென
வரவேற்போம் ஆங்கில புத்தாண்டை
2019 உளமார வருக!

எழுதியவர் : arunmozhi (31-Dec-18, 11:51 pm)
Tanglish : puthaande varuka
பார்வை : 344

மேலே