அடிகள் வெற்றியின் வழிகள்...

அடியின்மேல் அடிகள் விழுந்தாலும்
வீழ்ந்து சாகாதே!
வலிகள்தான் வெற்றியின் வழிகள்
சோர்ந்து போகாதே!
கண்ணிற்கு எட்டும்வரை சென்று
ஜெயித்திடு
எண்ணங்கள் போகும்வரை நீயும்
தொடர்ந்திடு
தோல்விகளின்றி இவ்வுலகில் இல்லை
வெற்றி...
உறக்கங்கள் ஏதுமேயின்றி
நகர்கிறேன் இகழ்ச்சியை வென்று
சறுக்கங்கள் இருந்திடும்வாழ்வு
வெற்றியின் வழிதானே..
என்தோழா...

போவேனென்று நீயும் செல்
உனையார் தடுப்பதும் கிடையாது
குழிக்குள் நீயும் வீழுந்தாலும்
புழுவைவிட்டால் வழியேது
பணத்தை தின்ன முடியாது
உயிரைத் தொடர வழியேது
லட்சியமின்றி வாழ்வதைவிடவும்
கொடிய நோயேது?
பணமென்று இருந்தும் மனமின்றி இருந்தால்
வாழும் வாழ்வு ஏன் நமக்கு??
வீண் இழப்பு...

ஒற்றைக் கண்ணையும் இழந்தாலும்
வெற்று வாழ்க்கையை வாழாதே!
கற்கும் காலத்தில் மறந்தாலும்
நிற்கும் நேரத்தில் மாறாதே
ஒளிகளை அழிக்க வழியேது
இயற்கையை தடுக்க முடியாது
வாயாலே பேசி வாழ்வதைவிடவும்
தாழ்வு என்றேது?
காணாத உழைப்பை நீ கடந்தோடும்போது
வெற்றி உன்னைவிட்டு கடந்திடுமே...

எழுதியவர் : sahulhameed (14-Jan-19, 3:33 pm)
சேர்த்தது : HSHameed
பார்வை : 198
மேலே