முன்னோடி

திசை என்னவோ அதில் விசை
கொள்ளலாம் நீ போகும் பாதையே உனக்கு வழி சொல்லலாம் இடர் நீக்கியே தோல்வி வெல்லலாம் நீ சுடர் ஆகியே இந்த உலகில் மின்னலாம் .
முகில் கொண்ட வானம் மழை தூவும் போதும் கண்ணீர் சிந்தித்தானே நம் கண்ணீர் தீர்க்க வாரும் அதுபோல நீயும் சிந்தும் கண்ணீர் யாவும் நாளை உந்தன் வாழ்வில் முத்தாய் பிரதிபலிக்கும் .

சில்லாய் நீ உடையும் போது ஒரு கல்லின் தெம்பை பெறுவாய் வில்லாய் நீ வளையும் போது ஒரு புல்லின் பாரம் அறிவாய் பாரமின்றி வெகுதூரம் செல்ல இங்கு வேறு வழிகள் இல்லை நீ பாரம் கண்டால் வெகுதூரம் செல்வாய் அதுவே வெற்றி என்னும் சொல்லை நிலைநிறத்தும் .

வெற்றி அது கடலை போன்று அலையாமல் திரியாமல் கிடைக்காதது கனவு அது செடியை போன்று முயற்சி பாய்ச்சாமல் என்றுமே வளராதது முயற்சி அதுவே உன்னை மேலே ஏற்றும் நீ கண்ட கனவை அரங்கம் ஏற்றும் இனி வாழலாம் முன்னேறியே நாம் எல்லோரும் முன்னோடியே

எழுதியவர் : M. Santhakumar . (19-Jan-19, 4:06 pm)
சேர்த்தது : Santhakumar
Tanglish : munnodi
பார்வை : 259

மேலே