- ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கலச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீதி நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்தியா முழுவதும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். வரும் டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இந்த கொண்டாட்டத்தின்போது சமுதாயத்திற்கு சீர்கேடு விளைவிக்கும் வகையில் கிளப் டான்ஸ், சாலையில் பைக் ரேஸ், பெண்களை கிண்டல் செய்வது, மதுபானங்கள் அருந்திவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவது போன்ற விரும்பதகாத நிகழ்வுகளும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து, நம் பண்பாட்டை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

எழுதியவர் : (1-Jan-19, 5:16 pm)
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே