காதல் ஜெனனம்
வயலோடும் வரப்போடும்
வளைந்து விளையாடும் தென்றல்
வாலிப நெஞ்சில் நிழலாடும்
புதிதாக பூத்த காதல் போல்
அழகிய பெண்களை காணும் போதெல்லாம்
அடிமனதில் தோன்றும் சிலிர்ப்பு
ஆங்காங்கே மலர்ந்த நெற்பூவில்
தேனெடுக்க தேடும் வண்டைப் போல்
முற்றிய கதிர்கள் முகம் சிவந்து நிற்க
கொத்தாய் பறித்து கூண்டில் சேர்த்த குருவி
கன்னியிடம் காதலைச் சொல்ல நினைக்கையில்
அவள் கணவனோடு கல்லூரிக்கு வந்ததைப் போல்
கருத்தில் கொண்ட எதுவும் - இயைந்த
சுரத்தில் இல்லாதாகவே என் காதல் ஜெனனம்
……… நன்னாடன்