ஒருவரி அன்பு

இன்று காலையில்
ரமணி வந்தான்...
காலை என்பது
எனக்கு அகாலங்கள்.
விழித்தும் விழியாத
எண்ணெய் வடியும் பகல்.
மூர்த்தி போய்ட்டான் என்றதும்
கொப்பளித்து போனது எனக்கு.
பள்ளிதோழன் பக்கத்து வீடு
இன்று அமெரிக்கவாசி...
ஈமெயிலில் நிரந்தர சகவாசம்.
ரமணியோடு துக்கம் கொண்டாடி
அவன் போனதும்
குளிக்க கிளம்பினேன்
மூர்த்தியின் போன் நம்பரை
அழித்துவிட்டு.

எழுதியவர் : ஸ்பரிசன் (7-Jan-19, 3:30 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : oruvari anbu
பார்வை : 297

மேலே