அப்பா
புதுப் பா
மரபுப் பா
இவற்றினும்
சிறந்த பா
எப் பா ? அவர்தான்
அப்பா
அப்பா தான்
தப்பா நாம் ஏதும்
செய்யத்திருக்க
வள்ளுவன் ஓலையில்
எழுதியதை
நம் மூளையில்
எழுதியவர்
பிதா
நம்மை
வறுமையிலும்
வளமையாய்
வளர்க்க நினைக்கும் பிதாமகன்
நான் அப்படியோர்
பிதா பெற்ற மகன்
என் கால் வாய்
நிரம்ப வாய்க்காலினை
மெய் கால் வலிக்க
சுத்தம் செய்யும்
மகானின் மகன் நான்
கடன் வாங்கி
என் கடன் செய்தவன்
தாயில்லா நேரத்தில்
என் உறக்கம் நீள
தன் கண் உறக்கம்
மறந்த ஆந்தை
நீ
என்னைக்
கருவறையில் சுமக்காது
கரு வரும்வரை
சுமந்த ஆண் தாய்
தையில் கூட
தான் கந்தை ஆடை
அணிந்து
எனக்கு நன் தை ஆடை
அணியும்
விந்தை மனிதன் என் தந்தை
தன் மனம் புண்படுத்துவோரையும்
பண்படுத்தச் சொன்னவன்
வரியோரிடம் தன் கை
நீட்டாது
உதவி என்று வருவோரிடம்
தன் கை நீட்டி தூக்கச் சொன்னவன்
என் தந்தை