அழகிகள் முன்னேற்றக் கழகம்
கலித் தொகையும்
கலாபத் தோகையும்
சேர்த்த கூட்டுத் தொகைதான்
அவளின் கூந்தல் தொகை
மார்கழி அதிகாலை
பனி பொழிந்துகொண்டிருந்தது
அவள் கண் விழித்ததும்
கனி பொழிய ஆரம்பித்தது
இவளின் பாதம்
ஒரு மைல் தூரம்
கடந்ததும்
அந்த மைல் கல்
இரண்டும்
மயிகள் ஆனது
இவள் பெண் குலத்தில்
பிறக்காது மின் குலத்தில்
பிறந்தவள்
இதை அறிந்தால்
போராட்டம் நடக்காது
கூடங்குளத்தில்
அவள் தாமரை
நான் மோடி
நான் ராகுல்
அவள் என் கை
பிடிப்பாளா ?
அவள் மாம்பழம்
தின்றால் நான்
பா ம க
அவள் மாம்பலத்தில்
நின்றால் நான்
தி மு க
அவள் இலையில்
உண்டால் நான் அதிமுக
அவள் குக்கரில் வடித்தால்
நான் அ ம மு க
அன்பே என் ஒரு ஓட்டை
இத்தனை பேருக்குப்
போட்டால் ஜனநாயகம்
ஆகும் ஓட்டை
ஆக நீ அ மு க அழகிகள் முன்னேற்றக் கழகம்
தொடங்கு நாம் காதல் கோட்டையில்
உலகம் வியக்கும் நன்மை பயக்கும்
ஆட்சி அமைப்போம்