காதல் பார்வை
நேரான பார்வையில் நேர்மை
நிரம்பி இருக்கும் என்பர்
நம்மை காதல் ஜோடிகளாய்
சேர்த்துவைத்த உன் பார்வை
என் பார்வை இரண்டும்
வந்திணைந்தன ஓர் நேர்கோட்டில்
காதல் ஒன்றே நாடி வந்த நம்
மனதின் நேர்மை தெள்ளத்தெளிவு
நேரான பார்வை நேர்மை ததும்பும்
காதல் பார்வை...............