தோழர்களே..

தூக்கு தண்டனை கைதி ம தி சாந்தனின் கவிதை ஒன்று உங்களுக்காக தயவு செய்து படியுங்கள் உங்கள் சோதரர் விடிவுக்காய் குரல் கொடுங்கள்.....
(மதிசாந்தன் அவர்கள் சிறையில் இருக்கும் போது எழுதிய நூல்)

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவரது கையிலிருந்த பெரிய சூட்கேஸ் எங்கே என்கின்ற சோனியா காந்தியின் வினாவிற்கே இதுவரை முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை. குற்றம் சுமத்தப்பட்டுத் தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளோர் கேட்கும் வினாக்களுக்கோ, அல்லது அவர்கள் மீதான குற்றங்களுக்கோ ஆதாரமெதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அப்படி இருக்க.......

அப்பாவிகளைத் தூக்கிலேற்றும் போது,
நீ பார்த்துக் கொண்டிருக்க
போகிறாயா தமிழகமே?
எட்டுக் கோடி மக்கள் இருக்கின்றார்கள்
எனும் உணர்வுடன் தானே
முள்ளிவாய்க்காலிலிருந்து கதறிக் கதறி
உன் பெயர் சொல்லி அழுதோம்?
அப்போதாவது கடல் தடுத்ததால்
கைவிட்டு விட்டோம் எனச் சொல்லி
நீ எம்மைத் தேற்றலாம்- ஆனால்
இன்று உன் தேசத்தில்
தூக்குத் தண்டனைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
தம் வாழ்வின் நாட்களை எண்ணி வாடும்
ஜீவன்களுக்கு
என்ன பதில் கூறப் போகின்றாய் தமிழகமே?
நிரூபனின் நாற்று வலை
உன்னால் முடியாதது
எதுவும் இல்லை தமிழகமே!!
நீ நினைத்தால்
தடுத்து நிறுத்தலாம் அல்லவா
இருண்டவன் கண்ணுக்கு அருண்டதும்
பேய் என்பது போல
அப்பாவித் தமிழர்களைக் கொன்று
தம் ஆதிக்கப் பசி தீர்க்கத் துடிக்கின்றது
காங்கிரஸின் கைங்கரியம்-
நீ என்ன கை கட்டி வாய் பொத்தி
பார்த்துக் கொண்டா நிற்கப் போகின்றாய் தமிழகமே?
நிரூபனின் நாற்று வலை
உணர்வு கொள் தமிழகமே
உன்னால் முடியாதது எதுவுமில்லை,
எம் உடம்பில் ஓடுவதும்
உன் ஆதி மூலத்திலிருந்து
பிறந்த இரத்தம் தானே.
நாங்கள் அடக்கு முறைக்கு
எதிராய் கிளர்ந்தெழுந்ததுவும்
நீ எமக்கு ஊட்டிய
அரியாசனக் கதைகளால் தானே சாத்தியமாகியது!

உங்களை இரந்து கேட்கின்றோம்,
இமை திறந்து
எழுச்சி கொள்ளுங்கள்!!

தமிழக உறவுகளே, உங்களால் முடியாதது எதுவுமில்லை. அலைகடலெனத் திரண்டு உங்களின் ஆதரவினைக் காட்டுங்கள். அப்பாவிகளின் உயிர் உங்களின் தேசத்தில் பறிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டுமா மௌனமாக இருக்கப் போகின்றீர்கள்?

எழுதியவர் : மதி santhan (27-Aug-11, 3:09 pm)
சேர்த்தது : janaarthanan
பார்வை : 464

மேலே