தெருவோர இரவு இட்லிக் கடை

சுலப விலையில் என்றாலும் சுவையாக
சுறுசுறுப்பாயும் சோம்பலாயும் வருவோருக்கு
வெவ்வேறு வகைகளில் அரிசி மாவினால் மட்டுமே
ஐந்து வகை சட்டினியுடன் அறுசுவையில் உணவுகள்
அசைவம் வேண்டுவோருக்கு அழகு முட்டையால்
அவிச்சது பொறித்தது பாதி வெந்தது
வெங்காயத்துடன் வெந்து விம்மென்று இருந்தது - என
விரும்புவோர் கேட்கும் வகையில் - எப்போதும்
சூடாகவே சுற்றி நின்று எத்தனை பேர் கேட்டாலும்
பட்டினியாய் யாரும் படுக்கக் கூடாது என்ற
பொது கோட்பாடுடன் இல்லையென்றாலும்
பொறுமையாய் சேவை செய்வதில் இவர்கள் - நமக்கு
பொக்கிஷம் போன்றவர்கள் வளர்ப்போம் இவர்களை.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (10-Jan-19, 9:29 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 278
மேலே