கேட்டது குத்தமா
காரணம் கேட்டேன்
காகிதம் ஆனேன்.
காலத்தால் கருகி
கருவினில் குறுகியே,
கரைந்தேன் கரைந்தேன்
காக்கையாய் கரைந்தேன்.
கலவு செய்ய
காக்கவில்லை கண்ணே ;
கேள்வி கேட்டு
காத்துக் கிடந்தேன்.
கருணையாய் கேட்டேன்,
கேட்டது குத்தமா?
குருதியின் கதறல்
சற்றும் குறையாதே
கறையைக் கடக்க
முடியாமல் கதறுகிறேன்
கந்தா கடம்பா
கதிர்வேலா கேட்டது குத்தமா?