காதல் காதல் காதல் காதல் என்ன காதலோ

காதல் காதல் காதல் காதல் என்ன காதலோ ?
**********************************************************************************
காதல் காதல் காதல் காதல் என்ன காதலோ ?
காதலென்ன கத்தரிக்காயா சுத்திவரும் முந்திரிக்காயா ?

காதல் அது காதல் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்
காதல் அது காதல் பாரியும் கபிலரும்
காதல் அது காதல் ஆழ்வாரும் திருமாலும்
காதல் அது காதல் நால்வரும் ஈசனும்
காதல் அது காதல் கோதையும் அரங்கனும்
காதல் அது காதல் சலீமும் அனாரும்
காதல் அது காதல் முல்லையும் பாரியும்
காதல் அது காதல் கன்றும் பசுவும்
காதல் அது காதல் தாயும் சேயும்
காதல் அது காதல் அடியாரும் தொண்டும்
காதல் அது காதல் நட்பும் பிணைப்பும்
காதல் அது காதல் குடும்பமும் பொறுப்பும்
காதல் அது காதல் கம்பனும் கவியும்
காதல் அது காதல் கவிதையும் வெண்பாவும்
காதல் அது காதல் கலைஞரும் முத்தமிழும்
காதல் அது காதல் சனாதனமும் அறமும்
காதல் அது காதல் இஸ்லாமும் ஈகையும்
காதல் அது காதல் தேசமும் பற்றும்
(இவைகளே உன்னத காதல் )
******************
காதல் இது காதலா திரைநாயகியும் நாயகனும்
காதல் இது காதலா மாதரும் சீரியலும்
காதல் இது காதலா ஓட்டும் கோட்டையும்
காதல் இது காதலா அரசியலும் பதவியும்
காதல் இது காதலா தேர்தலும் பணமும்
காதல் இது காதலா குற்றமும் கோர்ட்டும்
காதல் இது காதலா ஆசையும் கொலையும்
காதல் இது காதலா இளைஞரும் வாட்சப்பும்
காதல் இது காதலா {தினத்) தந்தியும் கன்னித்தீவும்
காதல் இது காதலா தேர்வும் அதில் ஊழலும்
(இவைகளின் காதலில் சமூக சீரழிவே )
*********************

பள்ளிக்கு கல்விக்கும் காதல்
பல்லிக்கு சுவர்மீது காதல்
பல்லுக்கு புன்னகையோடு காதல்
புல்லுக்கு நீர்மீது காதல்
பாம்புக்கு தவளைமீது காதல்
வம்புக்கும் சண்டைக்கும் காதல்
அம்புக்கும் இலக்குக்கும் காதல்
எலும்புக்கு சதைமீது காதல்
இன்னபிற இன்னபிற இன்னபிற
(இவைகளும் காதலே )

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Jan-19, 5:23 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 134

மேலே