நான் என்னென்ன வாங்கினேன்
நீலாங்கரையிலிருந்து தாத்தா பலவேந்திரனுடன் புத்தகம் வாங்க வந்திருந்தார் ரோஸ்மேரி. “தாத்தா, எனக்குப் புடிச்ச கதைப் புத்தகங்கள், புதிர்விளையாட்டு அட்டை, பொம்மையெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. நான் நைட் தூங்கும்போது தாத்தாட்ட கதை கேட்டுட்டுதான் தூங்குவேன். சாப்பிடும்போதும் பாட்டிட்ட கதை கேட்டுட்டே சாப்டுவேன். படங்களோட இருக்கிற குட்டிக் குட்டிக் கதைகள் இருக்குற புத்தகம்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்ற ரோஸ்மேரி, “ஹாப்பி ரீடிங்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

