என்னுயிர் தோழியே ( நட்பு )
கல்லூரி நட்பு
சின்ன சின்ன சண்டை ,.........,
பகிர்ந்தளிக்கும் சாப்பாடு ...............,
சிறிது நேர கோவம் ............,
சண்டை போட்டாலும் பார்க்கணும் எனும் தவிப்பு ....,
நம்மை சேர்க்க நம் தோழிகள் படும் பாடு
எதிர்பாரா உன் sms ................,
என்னை பற்றியே நீ எப்போதும் நினைப்பதாய்
தோழியிடம் விடும் தூது .............,
சண்டை போட்டாலும் எனக்கு பிடித்த உணவு, உடை அணிய செய்வது
தேர்வு நேரத்தினில் மதிப்பெண் குறைந்ததாலும் உன்னை அதிகம் பெற முடியும் என நீ சொல்லும் தைரியம் ..............
இதெல்லாம் இழந்திருப்பேன்
தோழியை உன்னை அடையாமல் போனால் .
இப்போதும் என் நினைவினில் நம் கல்லூரியே .,
உன்னை எனக்கு தோழியாய் கொடுத்ததால் ........,