நன்பேண்டா......
துயரத்தில் வீரம்
துணிவில் தோள்
தோல்வியில் தொடக்கம்
அழகிற்கு அழிவு
மறுக்கப்பட்ட மறதி
வேரறுக்கப்பட்ட நிறம்
உதிரத்தில் உறவில்லை
அறிவிற்கு அவசியமில்லை
பரிவிற்கு பஞ்சமில்லை
உரைப்பதை கேட்காமலில்லை
வானத்தின் நீலம் உண்மையில்லை
தொடுவோம் வானம் எல்லை இல்லை
சுமப்போம் வலியாகினும்
ஒரே நேரத்தில்
உன்னை என் தோளில்
என்னை உன் தோளில்
முரணாக இல்லை
ஹோர்மோன்கள் கலகம் செய்யுமாம்
கற்பிற்கு உத்திரவாதம் இல்லை
ஆனால் நட்பிற்கு உத்திரவாதமே
தேவை இல்லை
தொட முயன்றாலும்
தொடும் உயரமில்லை
ஏனெனில் வானமே நீலமில்லை
ஆனால்
உணர்ந்து பார்
உன்னிலேயே
ஒவ்வொரு அணுவாய்
உன் உயிராய்
நட்பு....
நன்பேண்டா......