கவிதை ஒன்று தமிழாலபனை செய்யுதே
பூக்களெல்லாம் விரிந்து இளம்காளையில் புது ராகம் பாடுதே
பூங்கா மேடை அழகு ராகங்களின் மௌன இசையரங்கம் ஆனதே
பூந் தென்றலின் சலனத்தில் மௌனங்கள் மெல்ல ஊர்வலம் போகுதே
புன்னகை ராகத்தை செவ்விதழில் ஏந்தி நீயும் வந்திட
என்நெஞ்சில் கவிதை ஒன்று தமிழாலபனை செய்யுதே !