பரவட்டும் பறை இசை

பறை தமிழர்களின் ஆதி இசை . அனைத்து காலங்களிலும் இது மக்களுக்கான இசையாக மட்டுமே இருந்துள்ளது . திணை வாரியாக தமிழர் வாழ்ந்த சங்க காலத்தில் இருந்தே தமிழரின் தனி அடையாளம் பறை . ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளாக ஒவ்வொரு பறையை கூறுகிறது தொல்காப்பியம் .

முல்லை - ஏறுகோட்பறை குறிஞ்சி - தொண்டகப்பறைமருதம் - மணமுழவுப் பறை நெய்தல் - மீன்கோட் பறை பாலை - துடிப்பறை

இது மட்டுமில்லாமல் அரிப்பறை , உவகைப்பறை , கொடு கட்டி , குரவைப் பறை என 60 க்கும் மேலான பறை வகைகள் நம்மிடையே இருந்துள்ளன.

பறை இல்லை என்றால் அது ஊரே இல்லை என்கிறது இந்த புறநானூற்று பாடல்

"துடியன் , பாணன் , பறையன்கடம்பன் என்று இந்நான்கல்லதுகுடியும் இல்லை "

இந்த பாடல் வாசிப்பவரை குறிக்கிறது , சாதியை குறிக்கவில்லை . ஆதித்தமிழர் வாழ்வியலில் போர் , விலங்கு , உழவு , விதைப்பு , அறுப்பு , இறப்பு , கூத்து , விழா , வழிபாடு , அரசுச் செய்தி என எதை அறிவிக்கவும் பறை தான் .

இவ்வளவு சிறப்பு பெற்ற பறையை சாதி அடையாளமாக , அலங்காரப்பொருளாக பார்க்காமல் , மக்களின் கலையாக மதித்து அதை கற்று மக்களிடம் இசைத்து மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் ஒத்த கருத்துடைய நண்பர்கள் உருவாக்கிய குழு "டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம் " . - இதன் விளக்கம் உயிர் இல்லாத ஒன்றில் இசை என்ற உயிரை எழுப்புவது .



இது நாள் வரை நேரில் மட்டுமே கற்பித்து நிகழ்த்தி வந்த கலையை ஆர்வ மிகுதியால் skype வழியான கற்றலை மற்றுமே கொண்டு தொடர் பயிற்சியினை மேற்கொண்டு மேடை ஏறி இருக்கின்றோம் . எங்களுக்கு பொறுமையாய் கற்றுக்கொடுத்த கோவையை சேர்ந்த பறை பயிற்றுனர் - சக்தி அவர்களுக்கு இந்த மேடையில் நன்றி கூறிக் கொள்கிறோம் . .எங்களின் பெருபான்மையோர்க்கு பறை தான் நாங்கள் கற்றுக் கொண்ட முதல் இசைக்கருவி .

எங்களோடு நீங்களும் வாருங்கள் , உலகம் முழுவதும் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் பறை ஒலிக்கட்டும் . "பறைக் கலைஞராய் பெருமை கொள்வோம் ." - இந்த முன்னுரையோடு தொடங்கிய எங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு

கிட்டத்தட்ட 1000 பேர் இருந்த அரனாகில் நிகழ்ச்சி முடிவில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் . அன்று முழுவதும் மிதந்து கொண்டே தான் இருந்தேன் .

இந்த நிகழ்ச்சியின் காணொளி
"Parai Performance at Michigan Tamil சங்கம்" என்று அடித்தால் youtube இல் இருக்கிறது .

எழுதியவர் : பாவி (22-Jan-19, 9:32 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 2547

மேலே