களவியல்
நெஞ்சில் காதல் ஊர்கிறதே
கண்கள் மேய்கிறதே
கட்டுப்பாடு தேய்கிறதே
கட்டவிழ்ந்த்து போகிறதே
பொதுவாய் வெட்கம் மலர்ந்திடுமே
அதுவாய் அச்சம் போய்விடுமே
மதுவாய் உதிரம் மாறிடுமே
மெதுவாய் உள்ளம் சேர்ந்திடுமே
உடை எனும் தடைகள் விலகிடுமே
உணர்வெனும் மடைகள் திறந்திடுமே
உயிர்கள் இணைந்திடுமே
உடல்கள் பிணைந்திடுமே
எண்ணற்ற முத்தங்கள்
ஏதேதோ சத்தங்கள்
கட்டிப்பிடிப்பதில் யுத்தங்கள் என
கொட்டிக் கிடக்கிறது இன்பங்கள்
வியர்வை இனித்திட
விந்து இடம் பெயர
இரவின் முடிவிலே இடைவேளை
நாளை மீண்டும் இதே வேலை
இது இறைவன் கொடுத்த விளையாட்டு
நீ மறுபடி ஆட தலையாட்டு