களவியல்

கைப்பேசி ஒதுக்கி விட்டு கண் பேச வா
கடிகாரம் நிறுத்தி விட்டு கதை பேச வா
பாசத்தை பரிமாற வா பாசாங்கு பண்ண வா
நிலவை சிலுவையில் வைப்போம்
இரவை இழுவையில் வைப்போம்
காதலை நெஞ்சத்தில் வைப்போம்
காமத்தை மஞ்சத்தில் வைப்போம்
கண்ணால் கண்டு
காதால் கேட்டு
நாவால் உண்டு
நாசியால் உயிர்த்து
உடம்பால் உற்று
உயிரை விதைப்போம்
உறவில் விழைவோம்
காற்றும் புகாமல் கட்டிக் கொள்வோம்
காந்தங்களாய் ஒட்டிக் கொள்வோம்
களைத்தோ கலைந்தோ போக மாட்டோம்
மீண்டும் மீண்டும் என கேட்போம்
பகல் நேரம் நெருங்கி வர பல்லைக் கடிப்போம்
பால்க்காரி வரும் முன்னே பாலைக் குடிப்போம்

நன்றி : திருவள்ளுவர்

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (24-Jan-19, 6:59 am)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 347

மேலே