விடிவா முடிவா

வாழ்க்கையில்
சில கேள்விகளின் விடைகள்
விடிவுகாலமாகும்
சில கேள்விகளின் விடைகள்
முடிவுகாலமாகும்
என் இதயத்திலும்
ஒளிந்துள்ளது ஆயிரம்
கேள்விகள் இதன்
விடைகள் தெரிந்தால்
வாழ்க்கை விடியுமோ
முடியுமோ நானறியேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (28-Jan-19, 10:37 pm)
பார்வை : 535

மேலே