என் காதலை உன்னிடம் சேர்க்காது

நிலவின் ஓரமாய்
ஓர் நிரந்தர வசிப்பிடம் நமக்காக....

மார்கழி பனி
உறக்கம் கெட்ட
உனக்கு நான் எனக்கு நீ
இரவு முழுவதும் தாலாட்டு பாட....

மிதிவண்டி பயணத்தில்
உனக்கென ஓர் இடம்
என் கைகளுக்கு இடையில்....

மின்மினி பூச்சியின்
வெளிசத்தை திருடி
ஒழித்து வைப்பேன் உனக்கென
என் உள்ளங்கை இருளில்...

பனித்துளி நனைத்த
பூக்களை அல்லி
உனக்கென்ன நான் தருகையில்
வெட்கப்பட்டு ஒட்டிகொள்ளுமோ பனித்துளிகள்
உன் விரலோடு....

வானத்தின் கீழே
மேகம் குடை பிடிக்க
நிலவை பிடிக்க
அடம் பிடிக்கும் உனக்காக
சிறை பிடித்து வைப்பேன் நிலவினை
என் வீட்டு முற்றத்தில்....

உருகி எரியும்
மெழுகு வர்த்தி
ஒளிரும் உன் முகம்
கைகள் பிடிக்க கண்கள் படிக்க
என்றோ நாம் பரிமாறிகொண்ட
காதல் கடிதங்கள்....

கானல் நீர் தாகம் தீர்க்காது
இந்த பகல் கனவும்
என் காதலை உன்னிடம் சேர்க்காது
தெரிந்தும் தொடர்கிறேன் தினமும்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (29-Aug-11, 11:26 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 465

மேலே