நினைவலைகள்
கயலெங்கும் நதி கங்கையா
நினைவெங்கும் அலை இம்மங்கையா!
நொடிகளின் வேகத்திற்கு இதயத்துடிப்புகளா
மரணத்தின் தொலைவுகளில் மனவேதனைகளா!
கண்ணாடிச் சிலை கயலோடு பதிந்ததோ
உணர்வுகளின் கலை இவள்பிம்பத்தின் கானலோ!
காற்றினிலே கரைந்திடும் மலைகளா
உயிர் மூச்சினிலே மறைந்திடும் இன்பங்களா!
அந்தியிலே வானத்தில் வர்ணக்கோலங்களா
மதிமந்தியிலே இவளிசைக்கும் வீணைகளா!