நான் உங்களை விட நல்லவன் தான்...!
நான்
உங்களை விட
நல்லவன் தான்.
மாத சம்பளமோ
பத்தாயிரம் - ஆனால்
அம்மாவின் கணக்கில்
எட்டாயிரம் மட்டுமே...!
மளிகைக் கடை
சின்னப் பையனிடம்
சீக்ரெட் கணக்கில்
சிகரெட்...!
அப்பாவுக்கு தெரியாமல்
அலமாரியில்
அம்மாவின் சேமிப்பு...!
வேலைக்கு போவதாய்
பொய் சொல்லி
நண்பனின் வீட்டில்
சீட்டுக்கட்டும்
மது புட்டியுமாய் அப்பா...!
யாருக்கும் தெரியாமல்
தங்கையின் தலையணை அடியே
தவிர்க்க இயலா அலைபேசி...!
உலகிற்கு
நீங்கள் நல்லவர்கள் - ஆனால்
திருடுகிறீர்கள்.
உலகிற்கு
நான் திருடன் - ஆனால்
நான் நல்லவன்.
ஆகவே -
நான்
உங்களை விட
நல்லவன் தான்...!