என் மனமன்றத்தில் நித்தம் நீ
சிப்பியில் விளைந்த முத்துக்களை
-----உன் செவ்விதழில் கோர்த்தது யாரடி
செங்கமல அழகு வண்ணத்தை
----உன் முக எழிலில் தீட்டியது யாரடி
பாதி நிலவினை எடுத்து வந்து
----உன் நெற்றியில் சூட்டியது யாரடி
வானவில்லை வளைத்து அதில்
-----விற்புருவம் அமைத்தது யாரடி
அங்கே ஓடி விளையாடும் இரு கயல்களில்
------மின்னல் ஒளியைச் சேர்த்தது யாரடி
இறைவன் என்பார் சிலர் இயற்கை என்பார் சிலர்
------இந்த பட்டிமன்றமெல்லாம் எனக்கு ஏதுக்கடி
என் மனமன்றத்தில் நித்தம் நீ
-----நடந்து வருகிறாய் அது போதுமடி !