அவளின் எண்ணம்
நினைவுகளால் எனை நெருங்குகிறாய்
கனவுகளால் எனை கடத்துகிறாய்
எனக்குள் எனை ஏனோ புதைக்கின்றாய்
பெண்ணே பெண்ணே
உன் பெயரை கேட்டால்
உள்ளம் உருளுதடி
உள்ளுக்குள் உலகம் ஒளியுதடி
பெண்ணே பெண்ணே
நெகிழும் புருவம்
வான வில்லென
அவ் வானில் வலையுதடி
கரும் நதியெனவே
கார் மேகம் கலையுதடி
பெண்ணே பெண்ணே