ஊடுருவல்

உறக்கம் தொலைத்த இரவுகளில்
நானும் அவனும் தனித்திருந்தோம்
நான் மௌனத்தை அணிய
அவனோ சதா சிந்தனையுடன்
அவன் சிந்தனைகளை மொழிபெயர்க்க
நான் களைகின்றேன் மௌனத்தினை
இது உங்களிடமிருந்து பெறப்பட்ட
மௌனமாக இருக்கலாம்...
உங்களுடன் நடைபயிலும்
சிந்தனையாக இருக்கலாம்....
தொடர தொடர ஆக்டோபஸ்ஸாய்
அமிழ்த்தும் அவன் சிந்தனைகள்
உங்களையும் ஆக்கிரமிக்கலாம்
ஆகாயம் விழுங்கலாம்..
ஆதவனை அணைக்கலாம்
அணுக்களாய் சிதறலாம்
நீங்களும் அவனுடன் நடைபயின்றால்
நீங்களும் உணரலாம் அவனை...
உங்கள் நல விசாரிப்புக்களை
தள்ளி வைத்து சதா ஏதோ
சிந்தனையில் அவன்
உங்களை ஊடுருவி ஊடுருவி
கணநேர தவிப்பில் தப்பிக்கலாம்...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (4-Feb-19, 7:58 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 146

மேலே