அவள் ஒரு தொடர்கதை

அவள் ஒரு தொடர் கதை .....
இரவினில் அவர்கள் வந்து போன தடயங்கள் என் மீது என்னொடு அடிக்கடி பேசும்,
காயத்தின் கண்கள் ரத்ததை கண்ணீராய் சிந்தும்,
ரத்தத்தின் வாசம் ஈக்களுக்கு இரை போடும்,

காயம் பட்ட உடலில், ஈரம் பட்ட மார்பில்
இரையை தேடுகிராள் என் மகள்
கானல் நீர் போல்,

என்னோடு பேசும் இரவுகள் எப்பொதும் அழுதுகொண்டெதான் இருக்கிண்றன,
கண்ணோடு பேசும் கண்ணீர் போல ,
வலிகள் உண்டு ,வலிமை இல்லை,

பூக்களின் வாசம் என் மீது வீசும்,
ஈக்களின் நேசம் மட்டும் அதிகம்
உணர்வில்லா பிணங்களை போல்,

காசுக்கு இரையாகிரேன் கரிக்கடை ஆடு போல்,
தேசத்திற்கு எத்தனயோ வழிகள் இருந்தும் ,
தெரு முனைகள் மட்டும் எனக்கு என்ன திருப்பு முனைகளா,

கருவறையில் ஏற்பட்ட பஞ்சம்,கடனாக ஒரு பிள்ளை,
மறுபிறவி எனக்கிருந்தால் ,மங்கையாக ஆசை இல்லை,

எழுதியவர் : Sakthivel (4-Feb-19, 12:50 pm)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
பார்வை : 174

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே