பார் ஆளுகின்ற பாரோட்டா

பட்டித்தொட்டி எல்லாம் பரோட்டா!-நான்
தட்டித்தட்டி எடுத்து தரட்டா!
பிச்சிபோட்ட பரோட்டா மேல -சிக்கன்
குருமா ஊத்த வரட்டா!

கட்டுக்கட்டுறவன் வெட்டுவெட்டுறவன்-பெஞ்ச
தட்டித்தட்டி கேட்பான் பரோட்டா!
மூட்டதூக்குறவன் முதுகவளைக்குறவன்
முட்டிமோதி வாங்கும் பரோட்டா!

வண்டி இழுக்குறவன் நொண்டி அடிக்குறவன்
கிண்டி திங்குறது பரோட்டா!-மனச
சுண்டி இழுக்குறதும் முண்டி அடிக்குறதும்
சீண்டி இழுக்குற பரோட்டா!

முட்ட ஒடச்சி மைதா பெசஞ்சி
வட்ட வட்டமா உருட்டும் பரோட்டா!-முதலாளி
தட்டு மேலதான் கணக்கு வச்சி
துட்டு வாங்குவான் கரெக்டா!

கொட்டும் மழையில வெட்டும் வெயிலுல
தொட்டுத்தொட்டு திங்கும் பரோட்டா!
வெட்டவெளியில ஓட்ட கடையில-கண்ணில்
பட்டுயிழுக்கும் மட்டன்கறி பரோட்டா!

கேன்சர் வந்தாலும் நாக்கு கேக்குற
கேரளா ஒட்டல் பரோட்டா!-டின்னர் லிஸ்ட்ல
கேன்சல் ஆகாத கேக்கு ருசியையும்
தோக்கவைக்குற தேடிவந்த பரோட்டா!

பிரியாணி,பீப்ரைஸ் எல்லாம்
பின்வாங்க வைக்கும் பிசியான பரோட்டா!
பெரியஞானியையும் பொட்டிபாம்பா
கட்டிபோட வைக்கும் ருசியான பரோட்டா

எங்களோட பரோட்டா!
திங்கவாங்க பரோட்டா!
பத்துரூபா கொடுத்தா-ஆனை
பசியையும் அடங்க வைக்கும் பரோட்டா
-அம்பேத் ஜோசப்

எழுதியவர் : (5-Feb-19, 9:36 pm)
சேர்த்தது : அம்பேத் ஜோசப்
பார்வை : 49

மேலே