அம்பேத் ஜோசப் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அம்பேத் ஜோசப்
இடம்:  அரியலுர்
பிறந்த தேதி :  31-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2018
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  16

என் படைப்புகள்
அம்பேத் ஜோசப் செய்திகள்
அம்பேத் ஜோசப் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2019 10:04 pm

தூக்கி ஆடிய பயங்கரவதத்தால்
ஆக்கி வைத்த ஆக்கினையால்!-பாகிஸ்தான்
பாக்கி வைத்த பாக்கியை!-துப்
பாக்கி வைத்து தாக்கினரே!!

முகாம்களின் கொண்டையிலும்!-தீவிரவாத
முகம்களின் மண்டையிலும்!
மறைமுகம் ஆனோரை-ரத்தக்
கறைமுகம் ஆக்கினரே!

மொண்டு குடித்த குறுதியால்!
கொண்டு வந்த கோபத்தால்
வண்டு நுழைய கூட இடமில்லாமல்!
குண்டு மழையை பெய்தனரே!

இக்கேடு ஒழிவதற்கே!-தீவிரவாதத்தை
அக்கோடு பேத்து யெறியுங்கள்!
முக்காடு கூட்டங்களே!-இனி
எக்காடு ஓடி ஒளிவீரோ!
-அம்பேத் ஜோசப்

மேலும்

அம்பேத் ஜோசப் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2019 9:36 pm

பட்டித்தொட்டி எல்லாம் பரோட்டா!-நான்
தட்டித்தட்டி எடுத்து தரட்டா!
பிச்சிபோட்ட பரோட்டா மேல -சிக்கன்
குருமா ஊத்த வரட்டா!

கட்டுக்கட்டுறவன் வெட்டுவெட்டுறவன்-பெஞ்ச
தட்டித்தட்டி கேட்பான் பரோட்டா!
மூட்டதூக்குறவன் முதுகவளைக்குறவன்
முட்டிமோதி வாங்கும் பரோட்டா!

வண்டி இழுக்குறவன் நொண்டி அடிக்குறவன்
கிண்டி திங்குறது பரோட்டா!-மனச
சுண்டி இழுக்குறதும் முண்டி அடிக்குறதும்
சீண்டி இழுக்குற பரோட்டா!

முட்ட ஒடச்சி மைதா பெசஞ்சி
வட்ட வட்டமா உருட்டும் பரோட்டா!-முதலாளி
தட்டு மேலதான் கணக்கு வச்சி
துட்டு வாங்குவான் கரெக்டா!

கொட்டும் மழையில வெட்டும் வெயிலுல
தொட்டுத்தொட்டு திங்கும் பரோட்டா!
வெட்டவ

மேலும்

பல வகை பரோட்டா கவியின் பல்லவியில் வந்துட்டா பாட்டாய் மாறி இங்கு பண்ணாதோ கலாட்டா. பசியாற்றும் பரோட்டா பலமாய் நாம் திண்ணுட்டா பலபாடு படுத்தி வைத்து ஓடி விடும் பெருங்கற்றா. கவிதையும் கருத்தும் அருமை எழுதுங்கள் நிறைய . 05-Feb-2019 10:41 pm
அம்பேத் ஜோசப் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2018 7:46 pm

அழுக்குத் துணிகளின்
அலங்கரிப்பில் அழகாய்
குப்பைகள் கும்மாலமிடும்!

அரிசியில்லா அடுப்பிலே
பார்க்கவந்த பல்லிகூட
பாவமாய் திரும்பியோடும்!

தண்ணீர் குழாய்களும்
கண்ணீர் விட்டு விட்டு
சொட்டு சொட்டாய் விழும்!

குப்பைத் தொட்டியை
மேடையாக மாற்றிக்கொண்டு
கொசுக்கள் கொண்டாடும்!

துடைப்பங்கள் துக்கப்பட்டு
மூலையிலே குந்தியழுது
தலைமயிரை உதிரும்!

தலைவலியில் படுக்க எடுத்த
தலையணைகூட நம்தலைவிதி
எண்ணி தலையில் அடித்துக்கொள்ளும்!

காய்ந்த பாத்திரத்தில்
கரப்பான்பூச்சிகள் முகம்
பார்த்து அலங்காரம்செய்யும்!

காய்கறி கூடையில்
காய்ந்த கத்தரியும்
வெம்பிய வெங்காயமும்
உழவனின்றி முளைந்திருக்கும

மேலும்

அம்பேத் ஜோசப் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2018 4:52 pm

பண்ணையாரே!
பாடுறேன் கொஞ்சம் கேளுங்க!

குனிஞ்ச தலைய நிமிராம - தெனம்
கூலிவாங்கி போனோம்!
கிழிஞ்ச எலையா கிழிபட்டு – ஓட்ட
கிளிஞ்சல்போல ஆனோம்!

அடுப்புல கரியா - வாழ்க்கையில்
கருகி போனோம்!
இடுப்புல சரியா துண்டுகட்டி
பழகி போனோம்!

கஞ்சிதண்ணி குடிச்சி
காலத்த கழிச்சோம் – அத
நெஞ்சிஎண்ணி துடிக்கையில
கடவுளத்தான் பழிச்சோம்!

கோமணத்த கட்டிகிட்டு
கூழ்குடிக்க சொன்னாரு –இவரு
கொட்டாஞ்சில டீ ஊத்த
கடத்தெருவுல நின்னாரு

எச்சியெல பொறுக்கச் சொல்லி
எச்சரிக்கை விட்டாரு-எங்கள
எட்டுஅடி தள்ளி நடக்கச் சொல்லி
கட்டளைகள் இட்டாரு

காட்டுபக்கம் கொட்டாபோட கூவத்துல
பட்டாசொத்து வாங்கி தந்தாரு- நாங்க

மேலும்

பட்டா சொத்து சேர்த்தாலும் பட்டாக்கத்தி பிடித்தாலும் சாதியாய்ப் பிரிசிச்சாலும் சதிவலை விரிசிச்சாலும் வேலி இட்டுத் தடுத்தாலும் வெட்கமின்றி போனாலும் வெட்டி (வெட்டியான் )வசம் சத்தியமே ! சத்தியம் சத்தியம்தான் 14-Jul-2018 5:09 pm
அம்பேத் ஜோசப் - அம்பேத் ஜோசப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2018 4:09 pm

இறையாண்மையை தலை கொய்து!
இயற்கையை கொலை செய்து!
கார்ப்பரேட் மலத்தை உண்ட விசுவாசம்!
ஏழை நிலத்தை கண்டு விலைபேசும்!

பணமுதலைக்கு தீனிபோட
தினமொரு ஆடு இறையாகும்!
பாமரன் பட்டினியில் கூணிபோக
என்திரு நாடு கறையாகும்!

பச்சை அழித்து- நிலத்திற்கு
பிச்சை வீசும் இழப்பிடு
எச்சை ஆளுமைக்கு எதிராய்
கொச்சை கோஷம் எழுப்பிடு

ஓ!தமிழனே….

எட்டுவழி போட்டு ஏழைஎளியோரை ஓட்டும் – நரிகளுக்கு
முட்டுவழி போட்டு ஏய்க்கும் எருமைகளை ஓட்டு
நட்டகல்லை பிடுங்கி எறிந்து வீரமாய் நடையை போடு
தோட்டகொல்லை தெரிந்து அறிந்து தூரமாய் கடையை போடு
-ஜோசப் அம்பேத்

மேலும்

எத்தனை நாட்கள் அடக்கி ஆழ்வார்கள்; நடுத்தெருவில் இறங்கி உரிமையைக் கேட்டால் சுட்டுக் தள்வார்கள்; இங்கே நீதி நியாயம் யாவும் செத்துப் போய் விட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 1:49 pm
அம்பேத் ஜோசப் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

"திருநெல்வேலி " பற்றி கவிதை ,கதை, கட்டுரை எழுதலாம்

மேலும்

நெல்லை சீமை (srimathy5a292dc57a238) முதல் பரிசு 29-Oct-2018 5:04 pm
நெல்லை சீமை (srimathy5a292dc57a238) 24-Jul-௨௦௧௮ - முதல் பரிசு 28-Oct-2018 6:09 pm
மேலும்...
கருத்துகள்

மேலே