இந்த எட்டுவழி சாலை இயற்கையை மட்டும் அழிக்கும் வேலை

இறையாண்மையை தலை கொய்து!
இயற்கையை கொலை செய்து!
கார்ப்பரேட் மலத்தை உண்ட விசுவாசம்!
ஏழை நிலத்தை கண்டு விலைபேசும்!

பணமுதலைக்கு தீனிபோட
தினமொரு ஆடு இறையாகும்!
பாமரன் பட்டினியில் கூணிபோக
என்திரு நாடு கறையாகும்!

பச்சை அழித்து- நிலத்திற்கு
பிச்சை வீசும் இழப்பிடு
எச்சை ஆளுமைக்கு எதிராய்
கொச்சை கோஷம் எழுப்பிடு

ஓ!தமிழனே….

எட்டுவழி போட்டு ஏழைஎளியோரை ஓட்டும் – நரிகளுக்கு
முட்டுவழி போட்டு ஏய்க்கும் எருமைகளை ஓட்டு
நட்டகல்லை பிடுங்கி எறிந்து வீரமாய் நடையை போடு
தோட்டகொல்லை தெரிந்து அறிந்து தூரமாய் கடையை போடு
-ஜோசப் அம்பேத்

எழுதியவர் : (30-Jun-18, 4:09 pm)
பார்வை : 49

மேலே