அறையப்பட்ட ஆணிகள்

தூக்கி ஆடிய பயங்கரவதத்தால்
ஆக்கி வைத்த ஆக்கினையால்!-பாகிஸ்தான்
பாக்கி வைத்த பாக்கியை!-துப்
பாக்கி வைத்து தாக்கினரே!!

முகாம்களின் கொண்டையிலும்!-தீவிரவாத
முகம்களின் மண்டையிலும்!
மறைமுகம் ஆனோரை-ரத்தக்
கறைமுகம் ஆக்கினரே!

மொண்டு குடித்த குறுதியால்!
கொண்டு வந்த கோபத்தால்
வண்டு நுழைய கூட இடமில்லாமல்!
குண்டு மழையை பெய்தனரே!

இக்கேடு ஒழிவதற்கே!-தீவிரவாதத்தை
அக்கோடு பேத்து யெறியுங்கள்!
முக்காடு கூட்டங்களே!-இனி
எக்காடு ஓடி ஒளிவீரோ!
-அம்பேத் ஜோசப்

எழுதியவர் : (26-Feb-19, 10:04 pm)
சேர்த்தது : அம்பேத் ஜோசப்
பார்வை : 43

மேலே