ஆனதடி என்னுடல் இந்நிலை

காலும் கால் கொலுசும்
நடையும் நளினங்களும்
உடையும் உன் உருவமும்
எழிலும் எந்நேர நினைப்பும்
கதிரும் கருத்த மேகங்களும்
நீரும் மெல்லிய ஓடைகளும்
காணுகையில்
இதயம் அதிர தசைகள் வியர்க்க
உடலெல்லாம் குலுங்க
பஞ்சவர்ணத்தை பார்க்கும்
அந்திமாலையை எண்ணி
ஆனதடி என்னுடல் இந்நிலை .
-- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Feb-19, 8:51 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 130

மேலே