காதலும்,ஊடலும்

ஊடலாம்,
பார்த்தும்
பார்க்கவில்லை
பேசியும்
பேசவில்லை
தூங்கியும்
தூங்கவில்லை
சாப்பிட்டும்
சாப்பிடவில்லை
அருகிலிருந்தும் தொலைந்துவிட்டோம்

காதல் என்னும் கடலில்
ஊடல் எனும் துன்பம்
நீயற்ற
ஊடல் பொழுதுகளில்
கனம் கூடிப் போகிறது
என் தனிமை

கூடலை நிகழ்த்தாவிடினும்
அழகான முத்தத்தை நிகழ்த்திவிட்டுப் போயேன்

அகிலா

எழுதியவர் : அகிலா (6-Feb-19, 9:57 am)
சேர்த்தது : அகிலா
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே