மீண்டும் வருவேன் எழுச்சியுடன்

என் மண்ணில் விழுந்த முதல் பூவும் நீ தான்....

என் கண்ணில் பட்ட முதல் நிலவும் நீ தான்....

தோற்றுப்போனேன் மறுமுறை என் தேடல் தவறு என்று உணர்ந்தேன்...

என் தேடலின் ரசனை குறையும் போது நீயும் என்னுள் இருந்து மிக விரைவில் மறைந்து போவாய்....

கண்ணீர் விட்டு அழுத நாட்களும் காரணம் தேடி என்னை சுற்றுது...

காதல் சிந்தி உதித்த என் கவிதைகள் எல்லாம் என்னை விட்டு கலைந்து செல்ல முயல்கிறது....

மண்ணை முட்டி மோதி வெளி வரும் விதை போல் ஓர் நாள் நானும் வருவேன்.... ✍🏻

எழுதியவர் : காமேஷ் கவி (10-Feb-19, 9:57 pm)
சேர்த்தது : காமேஷ் கவி
பார்வை : 132

மேலே