அருந்தமிழும் ஆங்கிலமும்
அடிப்பணிய மாட்டோம் என சூளுரைப்போம்
அன்றாடம் அதற்கே அடிமைப்படுவோம்
முத்தான நூட்கள் இதில் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு
முதலான தலைமுறையே அதற்கு இந்நூற்றாண்டே
இப்புவியின் பிறப்பின் போதே தோன்றியதிது
பிழைப்பை தேடியோரில் தோன்றியதிது
தன் வலிமையாலே தினம் வளர்ச்சியடையுது
பண வளர்ச்சி தருவதால் வளர்ச்சியடையுது
ஏழாயிரம் ஆண்டுகளாய் உரம் பெற்ற மொழி
எழுநூறு ஆண்டிலே வளர்ச்சி பெற்றதால் ஒடிந்திடுமோ
__ நன்னாடன்