பகவத்கீதா வெண்பா கர்ம யோகம் 13 சுலோகம் 37 38 39

37.
ரஜோகுணத்தில் தோன்றிய காமம் குரோதம்
பெரும்பா வமுடைத்து ஆதலால் நீஇவற்றை
எதிரி எனஅறி வாய் !

38.
புகையால் நெருப்பும் அழுக்கினால் ஆடி
கருப்பையால் பச்சை சிசுவுமே மூடினாற்போல்
ஆசையால் இந்தஞா னம் !



39 .
ஞானியின் நித்திய சத்துரு காமரூபம்
போதும் எனாததும் பூர்ணம்கொள் ளாததும்
ஞானத்தை மூடும்பார்த் தா !

-----கீதன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-19, 7:08 pm)
பார்வை : 36

மேலே