அருமருந்தாகின்றாள் சஞ்சீவினி
பகலவன் பூமியை பார்க்கும் முதல் எழும்பி வீட்டின் அனைத்து வேலைகளையும் முடித்து கடவுளை வணங்கி நண்பனை காணச்செல்லத்தயாராகும் மகனை வழியனுப்பியதும் மகேஸ்வரி காலை உணவை உட்கொண்ட பிறகு ஓய்வில்லாத இயந்திரமாய் மதிய சாப்பாட்டை செய்யத்தொடங்குகின்றாள்
சூரியதேவன் மேற்கினில் ஒழிந்து கொள்ள பூசையறையினுள் சென்று விளக்கேற்றி வாசனைப் பொருட்களை வீடெல்லாம் விட்டதும் தேத்தண்ணி போட்டெடுத்து இருக்கையில் அமர்ந்த போது தான் ஞாபகம் வந்தது, போய் சேர்ந்ததும் போண் எடுக்கின்றேன் என்ற மகன் இன்னும் எடுக்க வில்லையே என்ற எண்ணம் வந்தது மேசையில் இருந்த கைபேசியை எடுத்து மகன் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தினாள் அவனை சென்றடைய முடியவில்லை என்று குரல் எழுப்பியது என்ன நடந்ததோ என மூச்சு விட்டபடி அவனுடைய நண்பனின் அழைப்பு எண்ணுக்கு அழைக்கின்றாள்
நான் சபேசனின் அம்மா பேசிறேன் மகன் உன்னைபார்த்து கனநாளாச்சாம் என்று உங்க வீட்ட வந்தவன் இன்னும் கால் பண்ணவும் இல்லையே பா .....
வாறதாகத்தான் சொன்னவன் அம்மா இன்னும் வரையில்லை நானும் அவனுக்காக தான் காத்துகொண்டு நிற்கிறேன் ஒருக்கா நான் வஸ்ராண்டுக்கு போயிற்று உங்களுக்கு சொல்லுறேன் அம்மா .....
சரி மகன் .......
இளம் வயதினிலே தனது துணைவனை இழந்த மகேஸ்வரிக்கு சபேசன் அவள் நிம்மதிக்கு அருமருந்தாகவே விளங்கினான்.எத்தனையோ பேர் இரண்டாம் தாரமாக கல்யாணம் செய் என்று அறிவுரை கூறியும் என் மகனே எனக்கு போதும் என்று அவள் இளமையை அவனுக்காக செலவளித்து தன்னம்பிக்கையுடன் தனக்கு கிடந்த காணிகளை குத்தகைக்கு கொடுத்தே வளர்த்து படிக்க வைத்து அவள் கனவு போலவே அவன் ஒரு ஆசிரியனாக தனது படிப்பை முடித்திருந்தான்../
திண்ணையின் கணுவில் சாய்ந்த படி என்னவோ ஏதோ என்று மனமானது ஒரு நிலையில் இல்லாமல் சதிரம் படபடத்துகொண்டே இருந்தது இவள் மனம் எதைக்கூறினாலும் அமைதியடைவதாகவேயில்லை
மீண்டும் போண் பண்ணுவதாகச் சொன்ன சுந்தரும் இன்னும் பண்ணவில்லையே என்று மேலும் மேலும் குழப்பம் அடைந்துகொண்டேயிருந்தாள்/
அப்போது சபேசனுக்கு மகேஸ்வரியின் அண்ணனின் மகளை பார்த்திருந்தார்கள் அவளும் அவளுடைய அம்மாவும் வந்திருந்தார்கள் மகேஸ்வரியின் நிலையைக் கண்டு என்னாச்சி என வினவிய பின் மகேஸ்வரி அழத்தொடங்கி விட்டாள்.../
ஏன் இப்படி அழுறீங்க என்று மருமகள் கேட்டாள்../
காலையில் கூட்டாளியை பார்க்க போனவன் இன்னும் எந்த தகவலும் இல்ல புள்ள அங்கேயும் போகலையாம் எனக்கு மனம் ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டே இருக்கு ...../
அப்படி ஒன்றும் நினைக்காதீங்க ஏதும் வஸ் பிரச்சினையா இருக்கும் லேற்ரா போகலாம் அத்தை என்று சொல்லி முடிக்கவில்லை போண் அழைத்து சபேசனின் நண்பன் சுந்தர் தான் சொல்லுங்க மகன் அழுது ஓய்ந்த குரலுடன் கேட்டாள் அவன் இன்னும் இங்க வரயில்லை அவங்க வந்த வஸ்வண்டியும் வேனும் மோதினதாம் அதனால தான் வர பிந்துகின்றது போல அம்மா நீங்கள் கவலைப்படாதிங்கோ அம்மா நான் விசாரிச்சிட்டு சொல்லுறேன்.
கதிகலங்கிப்போனாள் உரக்க சத்தமிட்டு அழத்தொடங்கி விட்டாள் அயல் வீட்டாரெல்லாம் ஒன்று கூடி விட்டார்கள் என்ன நடந்ததாம் என்று சொல்ல சுந்தர் சொன்னதை சொன்னாள்
அவருக்கு ஒன்னும் நடக்காது இப்படி அழாதீங்க என்ற படி அவளுடைய கண்களை துடைக்கின்றாள்.../
விபத்துக்கு உள்ளானவர்கள் அனுமதித்த வைத்திய சாலைக்கு சென்று விசாரித்த போது அவசர சிகிச்சை பிரிவில் சபேசன் இருப்பதாக கூற அதிர்ச்சியில் ஆடிப்போகின்றான் சுந்தர் அவன் வரவில்லையே என்று சொன்னதுக்கே கதிகலங்கி போன அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவது என்பதை நினைத்தாலே இன்னும் இன்னும் அமைதியை இழந்து கொண்டே இருந்தான் பார்க்க அனுமதி இன்றி வெளியிலே தவித்தான்.
இரவாகி விட்டது மகேஸ்வரி சுந்தருக்கு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தாள் நாளை காலையில் தான் பார்க்க முடியும் என்று சொன்னபடி காவலாளி தன் கடமையைச் செய்கின்றான்./
சுந்தர் நடந்ததை தனது வீட்டில் தெரிவிக்கின்றான் பதை பதைத்துப் போனார்கள் நல்ல பொடியன் அவனுக்கு இப்படி ஆகணுமா என்ற படி கடவுளை வேண்டுகின்றார்கள் நல்லபடியாக இருக்க வேண்டுமென்றே, சுந்தரின் அம்மா
மகன் அவங்க அம்மாவுக்கு சொல்லத்தானே வேணும் என்று சொல்லத் தயங்கிய படி போணை எடுத்து தொடுக்கின்றான் அழைப்பை
அங்கு ஹலோ .....ஹலோ என்ற குரல் அது சபேசனின் மனைவியாக போற நிலா
சொல்லுங்க அண்ணா என்றாள் சுந்தர் தங்கச்சி நடந்த விபத்தில் சபேசனை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து இருக்குவினம் அம்மாவை காலையில் வெள்ளன வெளிக்கிட்டு வரச்சொல்லுங்கோ எங்கள் வீட்டுக்கு...// விம்மி அழுத படியே போணை வைத்து விட்டு அத்தையிடம் கூறுகின்றாள்.../ இதைகேட்ட மகேஸ்வரிக்கு தலையில் இடிவிழுந்தது போல அழுது புலம்பினாள் ஏன் கடவுளே என்பிள்ளைக்கு இப்படி நடக்க விட்டாய் என்ற படியே அழுதாள் எத்தனை பேர் வந்து ஆறுதல் சொல்லியும் அவள் மனம் சம்மதிக்க வில்லை இரவு முழுக்க தூங்கவும் இல்லை காலையில் மகேஸ்வரியும்,நிலாவின் அம்மாவும் சென்றார்கள்
அதற்கிடையில் சுந்தர் பார்க்க சென்றான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியிலே உறைந்து போனான் அவன் தனது வீட்டுக்கு வரக்கூட முடியாமல் நிலையிழந்து போனான் அப்போது சபேசனின் அம்மாவின் அழைப்பு இவனை அடைந்தது அவர்களை பேருந்து நிலையத்திற்கு சென்று அழைத்து வந்தான் அவர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் சமாளித்துக் கொண்டே வைத்திய சாலையை அடைகின்றார்கள் .சபேசன் இருக்கும் அறையை அடைந்ததும் சபேசனை கண்டு மகேஸ்வரிக்கு சித்தம் கலங்கி அவள் பட்ட பாட்டை பார்த்தவர்கள் முகமெல்லாம் கண்ணீர் வடியாமால் இருக்க வில்லை சபேசனுக்கு இரு விழிகளும் அந்த கோர விபத்து செயலிழக்க செய்த அதிர்ச்சியில் ஒரு தாயானவள் தன் மகனை கண்ணாக பார்த்தவள் எவ்வளவோ துன்பச்சுமையை சுமந்தவள் மனதினில் சொல்லமுடியா ஆசையும் கனவும் வளர்த்தவள் எப்படித் தங்குவாள் இந்த விதியின் விளையாட்டை
அம்மாவுக்கு ஆறுதல் சொல்லுகின்றான் சபேசன் அவனுக்கு ஆறுதல் யார் சொல்லுவது வாழ்வில் ஒரு நாள் இருட்டு என்பது வரக்கூடியது தான் வாழ்நாள் முழுதும் இருட்டாகி விட்டதே என மனதுக்குள் வெம்பி விசும்பிக்கொண்டே இருந்தான் அவன் கண்ட கனவுகள் அப்பாவை இழந்த நாளிலிருந்து நெருப்புக்குள் வாழ்ந்த தாயை எந்தக்குறையுமின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கனவு கலைந்து வெறும் காரிருளைக் கொடுத்தது.
யாரை குற்றம் சொல்லுவது போதையில் எதிரே வந்த வேன் சாரதியையா ?தொலைபேசியை காதில் வைத்துக் கொண்டு முன்னாள் சென்ற வாகனைத்தை முன்னோக்கி செல்ல வேகமாக செலுத்திய பேருந்து சாரதியையா?
சபேசனுக்கு நடந்த இந்த கொடூரத்தை கண்ட நிலாவின் தாய் சுயநலத்துக்குள் செல்லுகின்றாள் தன் மகளின் நிலை என்னவாக போகப்போகின்றது என்ற எண்ணம் அவளை குத்திக்கொடைந்தது யார் யாருக்கு ஆறுதல் சொல்வதென அனைவருமே விரக்தியில் மௌனமாகவே நின்றார்கள், சபேசனுக்கு குணமடையும் வரை சுந்தரின் வீட்டிலேயே மகேஸ்வரி தங்கினாள் நிலாவின் அம்மா மறுநாள் ஊருக்கு வந்து விட்டார்../
நாட்கள் இருளாகவே இருந்தாலும் கடந்து விட்டது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்கள் சுந்தர் மிகவும் உறுதுணையாக நின்றான் வீடே நிரம்பி போனது சபேசனை காண வந்தவர்களெல்லாம் கண்ணீர் சிந்தாமால் சென்றவரில்லை நடந்ததை சொல்லிச் சொல்லி வாயே வலிக்க தொடங்கி போனது சம்மந்திக்கு../
காலங்கள் அவனுக்கு தெரியாமலே கடந்து போனது மற்றவர்களை சிரிக்க வைப்பான் அவனை சிரிக்க வைக்க யாருமே இல்லமால் போனது
இரண்டு வருடம் ஓடி விட்டது சுந்தர் மட்டும் அடிக்கடி அவனை பார்க்க வந்து வெளியில் கூட்டிப்போவதும் சந்தோசப்படுத்துவதுமாகவே இருந்தான் சபேசன் சொன்னான் ஏன் நண்பா உனக்கு சிரமம் அடிக்கடி வருவது எத்தனை கஷ்டம் என்றான்
டேய் இந்த நேரம் நான் உனக்கு துணையாக இருக்கா விட்டால் நல்ல நண்பன் இல்லடா
மகேசுக்கும் வயதாகியதால் முதல் மாதிரி வேலைகளும் செய்ய முடிவதில்லை சபேசனுக்கு பார்வை இழந்ததும் அவனுடைய சொத்துக்களை கண்டு ஆசை கொண்ட அனைவரும் விலக ஆரம்பித்தார்கள் ஏன் முறைப்பெண்ணாக இருந்த மாமன் மகளும் மனமாறிப்போனாள் விழியை இழந்த நாளிலிருந்து வலியை மட்டுமே சேமித்துக்கொண்டான் வழியறியாத வாழ்வை எண்ணி வாழ்ந்தான்.
ஒரு நாள் வீட்டின் அருகில் வாகனத்தின் சத்தம் கேட்டது யாரென மகேஸ்வரி உற்றுப்பார்க்கின்றாள் மதித்தும் மதியாதமாதிரியுமாக வாங்க பிள்ளை என்று அழைத்தாள் அதில் வந்த பெண் அம்மா என்றவுடனே மனதுக்குள் ஒரு இனிமை சுரந்தது அனுபவித்த துன்பங்களெல்லாம் கலைந்து போனது போன்ற உணர்வை தந்து அதன் தேன் குரல் மீண்டும் அந்தக்குரலால் சபேசனை வினாவியது உள்ளே தான் இருக்கின்றான் என்றவுடன் அந்த குரலின் சத்தத்தில் சபேசன் அடையாளம் கண்டு விடுகின்றான் இவள் தான் சபேசனின் பள்ளிக்காதலி சஞ்சீவினி சபேசனைக் கண்டவுடன் வார்த்தையினை மறந்த குழந்தை போலாகின்றாள் விழிநீர் கன்னங்களை நனைக்கின்றது
அவள் மேல்படிப்புக்காக வெளிநாடு சென்று இருந்தாள் இப்போது தனது படிப்பை முடித்து சொந்த நாட்டிற்கு வந்த உடனே தனது காதலனை காண வந்தவள் இவன் நிலையைக்கண்டு அவளால் தாங்க முடியாத வேதனைகளை சுமக்கின்றாள் அவள் படித்த படிப்பும் வைத்தியர் தான் இருந்தாலும் இவளுக்கு தன் காதலனின் நிலையைக்கண்டு எல்லாவற்றையும் மறக்கின்றாள் இன்னும் அவள் காதல் அதிகமானது அது காதலை விட மேலான பாசம் அவளுக்கு
அவள் அவனை துணைவனாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்கின்றாள் எல்லோரும் பலவிதமான எதிர்மறைக்கருத்துக்களை முன் வைக்கிறார்கள் எல்லாத்தையும் பாசமெனும் கூரிய ஆயுதத்தால் உடைத்தெறிந்து சபேசனுக்கு விழியின்றிப்போனாலும் அவன் வாழ நல்ல விழியாகி வழிகாட்டுகின்றாள் இன்று வரையும் அவன் பார்வையை மீண்டெடுக்க அவள் முயற்சி குறைந்த பாடில்லை இருந்தாலும் அவனோடு அவள் வாழ்வு மகிழ்வாகவே கழிக்கின்றாள். விழியை இழந்த நாளிலிருந்து அவன் மகிழ்ச்சியை கண்டது என்பது குறைவாகவே இருந்தது
என்றும் இல்லாதது போல அவன் இன்று புன்னைக்கின்றான் அகமகிழ்ந்து பூரிக்கின்றான் ஏனெனில் அவன் அப்பாவாகப்போகின்றான்.../

