அரசியல் சாமியார்கள்

ஏய்யா பொன்னையா, உம் பையன்கள் மூணுபேரையும்
நீ சாமியாராக்ப் போறதா ஊருல எல்லாம் பேசிக்கிறாங்க. அது உண்மையா?
@@@@@@
அது நூத்துக்கு நூறு உண்மைதான்ய்யா கண்ணையா.
@@@@@
உனக்கு இவ்வளவு வசதி இருந்தும் பெத்த பிள்ளைங்களை சாமியாராக்க ஆசைப்படற?
@@@@@
ஆசை இல்லய்யா. ஆசை இல்லை. இது குறிக்கோள். எங்க தாத்தா காலத்திலிருந்து எங்க குடும்பம் தீவிர அரசியலில் இருந்தும் எங்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தருகூட ஊராட்சி மன்ற உறுப்பினராக்கூட ஆகமுடியல. இப்ப காலம் மாறிப் போச்சு. நம்ம நாட்டில எப்பவுமே சாமியார்களுக்கு மரியாதை அதிகம்.
@@@@
அதுக்காக?
@@@@@
எம் பையன்களை உயர்கல்வியோட முறைப்படி சாமியார்கள் ஆக்கி வடக்க அனுப்பி வைக்கப்போறேன்.
@@@@@
வடக்க அனுப்பினா என்ன ஆகும்?
@@@@
வடக்க சில சாமியார்கள் அரசியல்ல உயர் பதவில இருக்கிறாங்க. எம் பசங்க தகுந்த தகுதியோட வடக்க போறாங்க. அவங்களால எங்க தாத்தா குறிக்கோள் நிறைவேறும்.
எம் பையன்களுக்கு நம்ம தமிழர் வழக்கப்படி தமிழ்ப் பேருங்கள வைக்கல. இந்தி சமஸ்கிருதம் சரளமா பேச எழுதத் தெரியும். பூசை புனஸ்காரம், யாம் எல்லாம் செய்யத் தெரியும். இந்தத் தகுதியே போதும் அவுங்க மூணு பேரும் அரசியலில் உயர்ந்த நிலையை அடைய. அவுங்க வடக்க போறதுக்குள்ள மூணு பேரும் அறிவியலில் முனைவர் (டாக்டர்) பட்டம் வாங்கிடுவாங்க. அவுங்க மூணு பேருக்கும் அரசியல் அறிவியல் அறிஞர்கள் என்ற கூடுதல் தகுதியும் கெடச்சிரும்.
@@@@@
யோவ் பொன்னையா, நீ ரொம்பப் பெரிய ஆளய்யா.

எழுதியவர் : மலர் (13-Feb-19, 10:36 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 108

மேலே