தூக்கி எறியப்பட்ட ஒரு அழகிய காதல் 555
![](https://eluthu.com/images/loading.gif)
காதல்...
சாலையோரம் கண்டேன்
ஒரு அழகிய ரோஜா...
இன்று யாரோ
ஒருவர் கொடுக்க...
யாரோ ஒருவர் தூக்கி
எறிந்த
சுவடுகள் சாலையோரம்...
எப்போது ஏறியப்பட்ட
ரோஜாவோ வாடவில்லை...
யார் பாதங்களிலும்
படவுமில்லை...
கொடுத்தவரின் மனதில்
இதுவரை யாருமில்லை...
வாங்க
மறுத்தவரை தவிர...
ஏனோ கொடுக்க பட்ட
ரோஜாமலர் மலராமலே மொட்டாக...
வாங்க மறுத்தவரின்
இதயம் போல...
பறிக்க பட்ட ரோஜாவிற்கும்
இப்போதுதான் வலித்ததாம்...
சாலையோரம்
தனிமையில் கிடைப்பதால்...
சாலையோரம் கிடைக்கும்
ரோஜா
மலருமா...
இல்லை கருகிவிடுமோ.....